இது பதிலடி ‘பீப்'!

சிம்புவின் 'பீப்' பாடல் சமூகத்தின் சகல தளங்களையும் கொந்தளிக்க வைத்துள்ளது. இந்தச் சூழலில் பீப் பாடலுக்கு, பெண் ஒருவர் பதில் சொல்லும்படியான பாடலை 'மெட்ராஸ் சென்ட்ரல்' குழுவினர் வெளியிட்டுள்ளனர்

முதல் எதிர்ப்பு ‘பீப்'!

‘வாட்ஸ் ஆப்' தமிழனுக்கு சிம்பு அண்ட் கோ மூலம் புதிய சொல் கிடைத்துள்ளது... ‘பீப்'!

அந்தப் பாடல் வெளியான சில தினங்களிலேயே ‘பீப்' பாடலுக்கு எதிரான பாடல்' என்று ஒரு பாடல், யூடியூப், ஃபேஸ்புக் ஆகியவற்றில் வைரலானது. அந்தப் பாடல் பிறந்த இடம் மலேசியா! அதுதான் ‘பீப்' பாடலுக்கு எதிரான முதல் பாடல்.

‘பீப்' பாடலில் இடம்பெற்ற எந்த கெட்ட வார்த்தைகளும் இல்லாத, மிகவும் கண்ணியமான முறையில் இந்தப் பாடல் பாடப்பட்டிருந்தது. அதைப் பாடியவர் புனிதா ராஜா என்ற மலேசியப் பெண். அவரே இந்தப் பாடலை எழுதியிருக்கிறார். இந்தப் பாடலுக்கு சந்தேஷ் என்பவர் இசையமைத்துள்ளார்.

தற்போது மலேசியாவில் பல்கலைக்கழகம் ஒன்றில் படித்து வரும் அவரைத் தொடர்பு கொண்டோம். ஆனால் 'கால் வெயிட்டிங்!'

அந்தப் பாடலின் சில வரிகள் இப்படி இருக்கின்றன...

பொண்ணுங்களை தப்பா பேசாதே மாமா மச்சி

பொண்ணுங்களை தப்பா பேசாதே...

எங்களை சீண்டி பாக்காதே மாமா மச்சி

தப்பு கணக்குப் போடாதே...

நாங்க நாட்டை ஆளும் காலம் வந்து

ரொம்ப நாளு ஆச்சிடா

வீட்டுக்குள்ள பூட்டி வெச்ச காலம் போச்சுடா...

உங்க பாட்டையெல்லாம் கேட்டு கேட்டு

மண்டை சுத்திப் போச்சுடா

இப்போ நாங்க பாடப் போறோம் கேட்டுக்கோயேண்டா...